dcsimg

மண் மலைப்பாம்பு ( Tamil )

provided by wikipedia emerging languages

அயகரம்[2] (Gongylophis conicus) என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர்.

உடலளவு

  • பிறக்கும் போது -- 12.5 செ.மீ
  • வளர்ந்த பிறகு -- 50 செ.மீ
  • அதிகவளவாக -- 100 செ.மீ
 src=
மண் மலைப்பாம்பு

உடல் தோற்ற விளக்கம்

  • சிறிய, தடித்த உடலுடையது.
  • தலை மற்றும் வாலின் செதில்கள் அதிகளவு கீலுடையது [சில சமயங்களில் கணுக்களாகவும் இருப்பதுண்டு]
  • சிறிய கண்ணும் செங்குத்தான கண்மணியும் உடையது.
  • மிகச்சிறிய வாலுடையது.

நிறம்

  • பல்வேறு நிறங்களையுடையது : செம்பழுப்பு, மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு அல்லது கருப்பு; சீரற்ற திட்டுகள் இப்பாம்பை கண்ணாடி விரியனைப்போல தோற்றமளிக்கச் செய்கின்றன.
  • உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெண்ணிறம்.

இயல்பு / பழக்கவழக்கம்

  • இரவில் நடமாடக்கூடியது; ஆனால் பகலில் மட்டுமே வேட்டையாடும்.
  • இரையை நெரித்துக் கொல்லும்.
  • எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணிகளின் வளைகளில் அதிகளவு காணப்படும்.
  • பதுங்கியிருந்து தாக்கும் முறையைப் பின்பற்றி பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றையும் வேட்டையாடும்.

குட்டிகளை ஈனும் முறை

  • 6 முதல் 8 குட்டிப்பாம்புகளை ஈனும்.
  • ஈனும் மாதங்கள் : மே முதல் சூலை.

பிற முக்கிய இயல்புகள்

தொந்தரவு தரப்பட்டால், உடலை உப்பச்செய்து விரியன் பாம்புகளைப் போல் இவை கொத்தும். ஆனால் இவற்றிற்கு நஞ்சு இல்லாததால் மாந்தருக்கும் பிற பெரிய விலங்குகளுக்கும் உயிரிழக்கும் வாய்ப்பு இல்லை.

பரவல்

உருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்

தகவல் உதவி

Snakes of India - The Field Guide -- இரோமுலசு விட்டேக்கர் மற்றும் அசோக் கேப்டன்

சொல் உதவி

  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
  2. [1]
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மண் மலைப்பாம்பு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

அயகரம் (Gongylophis conicus) என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்